இந்தியாதமிழ்நாடு

இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே கோர விபத்தில் சிக்கியது..! 10 பேர் உயிரிழந்த நிலையில் தளபதியின் நிலை என்ன..?

தமிழகத்தில் உள்ள நீலகிரி மாவாட்டம் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று திடீரென விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இன்று சட்ட்ரி நேரத்திற்கு முன் வானில் கம்பீரமாய் பறந்து கொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் திடீரென கிழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வெலிங்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 10-க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது .

இந்த விபத்தில் இதுவரை 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஆட்சியர் அப்ரித் கூறியதாவது :

“விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் 10-க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் பயணித்ததாகவும், இதில் 10 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image

திடீர் வானிலை மாறுபாடு காரணமா அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்பப் பிரச்சினை காரணமா என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.”

இவ்வாறு ஆட்சியர் அப்ரித் கூறியுள்ளார். இதில் முக்கிய குறிப்பு என்னவென்றால் இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்தும் இந்த ஹெலிகாப்டரில் பயணித்துள்ளாராம் . இதுவரை அவரின் நிலை குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை

Image