விளையாட்டு

ஐபிஎல் 2022 : சின்ன தல ரெய்னாவை கைவிட்ட சென்னை அணி..! வருத்தத்தில் ரசிகர்கள்.

ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக சென்னை அணியில் ரெய்னா தக்கவைக்கப்படாதது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆரம்பகட்டத்தில் இருந்து நம்ம தல தோனியோடு சின்ன தல சுரேஷ் ரெய்னாவும் வெற்றிக்கு வழிவகுத்து வந்தார். 2020ஆம் ஆண்டு சீசனை தவிர்த்து சென்னை பங்கேற்ற அனைத்து சீசனிலும் விளையாடியுள்ள ரெய்னா, 172 போட்டிகளில் 4,654 ரன்கள் குவித்து அதிக ரன் எடுத்தவராக திகழ்ந்து வருகிறார்.

பேட்டிங், ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், அணியின் முதுகெலும்பாக கருதப்பட்ட ரெய்னா, கடந்த சீசனில் சற்று சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பது சற்று ஏமாற்றமளித்தது .

IPL 2021: 5 Reasons Why CSK Must Retain Suresh Raina

இந்நிலையில் முதன்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரெய்னாவை ஐபிஎல்லில் தக்கவைக்காமல் போனது அவரது ரசிகர்களை பெரும் ஏமாற்றமடைய வைத்துள்ளது.

இந்த முறை 2 புதிய அணிகள் டிராஃப்ட் முறையில் வீரர்களை விலைக்கு வாங்க முடியும் என்பதால், ரெய்னாவை தேர்வு செய்வார்களா என கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை இரு அணிகளும் ரெய்னாவை தேர்வு செய்யாவிட்டால், மெகா ஏலத்தில் ரெய்னா கலந்துக்கொள்வார்.

MS Dhoni Is The Best Captain India Ever Had: Suresh Raina - Republic TV  English | DailyHunt

நாம் நினைப்பது போல் இவை சாத்தியமானால் மீண்டும் ரெய்னாவை சென்னை அணி ஏலமெடுக்க வாய்ப்பு உருவாகலாம். இந்நிலையில் சின்ன தல ரெய்னா பெரிய தல தோனியுடன் ஒரு அணியில் ஒன்றாக விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.