மக்களே நாளை உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி..! தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் என்றாலே தமிழகம் மற்றும் சென்னையை இந்த மழை ஒரு வழி செய்துவிடும்.ஆனால் இந்த ஆண்டு மழை கொஞ்சம் அதிகமா நம்மை செய்துவிட்ட்டது .ஏற்கனவே ஏரி,குளங்கள் நிரம்பி உள்ளநிலையில் தற்பொழுது வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (நவ.,30) உருவாகும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய கிழக்கு அரபிக்கடலில் டிச.,1-ம் தேதி மற்றொரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பிப்ரவரி மாதம் வாராய் தொடரும் என கூறப்படுகிறது .இது 2015 ஆண்டு மழையை ஒப்பிடும் போது இந்த வருடம் குறைவு தான்.தமிழகத்தில் நாளை முதல் மழை குறையத் துவங்கும். வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது .
