அரசியல்தமிழ்நாடு

சேலம் மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக் பெயர் மாற்றம்..! கடும் கண்டனம் தெரிவித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்…

சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும் அம்மா மினி கிளினிக்கின் பெயரை மாற்றி ‘முதலமைச்சர் மினி கிளினிக்’ என்று புதிய பெயர் பலகையை திமுகவினர் மாற்றிவைத்துள்ளனர்.

இந்நிலையில் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கூறியதாவது :

பெயர் பலகையை மாற்றியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து ‘அம்மா மினி கிளினிக்’ என்ற பெயர் பலகையை மீண்டும் பொறுத்த வேண்டும்

இதுபோன்ற செயல்களில் திமுகவினர் செயல்படாமல் மக்களுக்கான நற்பணியில் ஈடுபட சொல்ல வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார் .