30,000 தூய்மை பணியாளர்கள் சென்னையில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர் – சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி
30,000 தூய்மை பணியாளர்கள் சென்னையில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :
100 குதிரை திறன் வேகம் கொண்ட பம்புகளை பயன்படுத்தி மழை நீரை அப்புறப்படுத்தும் பணி தொடர்கிறது. 600க்கும் மேற்பட்ட பம்புகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்
20க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மழை நீர் வெளியேற்றுவதையும் மக்கள் நிலை குறித்தும் கண்காணிக்கின்றனர்
30,000 தூய்மை பணியாளர்கள் சென்னையில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல்கட்டமாக பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்
