அரசியல்தமிழ்நாடு

மழை காலகட்டத்தில் அதிமுக அரசு எடுத்த போர் கால நடவடிக்கைகளை தமிழக அரசு பின்பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னையில் 1,000 க்கும் மேற்பட்ட இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. மழை காலகட்டத்தில் அதிமுக அரசு எடுத்த போர் கால நடவடிக்கைகளை தமிழக அரசு பின்பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :

தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 1.50 லட்சம் ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர் பாதிக்கப்பட்டுள்ளது

கால்நடை உயிரிழப்புகளுக்கும் தமிழக அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும்

இடுபொருள் நிவாரண தொகையினை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.

மழை பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு செய்ய தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். முதல் கட்ட பேரிடர் நிதியை விடுவித்து அரசாணை வெளியிட வேண்டும் என அவர் தெரிவித்தார்.