அரசியல்தமிழ்நாடு

தூத்துக்குடி மாவட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் மாவட்ட முன்னனி வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் லோன் மேளாவை தொடங்கி வைத்து கனிமொழி எம்பி

தூத்துக்குடி மாவட்டம், AVM கமலவேல் மஹாலில் இன்று பாரத ஸ்டேட் வங்கி மற்றும் மாவட்ட முன்னனி வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் லோன் மேளாவை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு கடன் ஆவணங்களை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான கீதா ஜீவன் எம்எல்ஏ, மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு.செந்தில்ராஜ், பாரத ஸ்டேட் வங்கி முதன்மை பொது மேலாளர் ராதாகிருஷ்ண ராயபரம், நபார்டு தூத்துக்குடி மேலாளர் சுரேஷ் ராமலிங்கம், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மற்றும் பலர் கலந்துகொண்டனர்.