அரசியல்தமிழ்நாடு

வாக்களித்த பொதுமக்களுக்கும், திமுக மற்றும் தோழமை கட்சிகளுக்கும் நன்றி – விசிக தலைவர் திருமாவளவன்

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விசிக சார்பில் ஒன்றிய கவுன்சிலர்களாக 27 பேரும்,மாவட்ட கவுன்சிலர்களாக 3 பேரும் வெற்றிபெற்றுள்ளனர் பல ஊராட்சித் தலைவர்கள் வெற்றிபெற்றுள்ளனர். வாக்களித்த பொதுமக்களுக்கும், திமுக மற்றும் தோழமை கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்

உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து அவர் கூறியதாவது :

அனைத்துத்தரப்பு மக்களின் நன்மதிப்பையும் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளது விசிக; எமக்கு எதிரான அவதூறுகளை தமது வாக்குத் தோட்டாக்களால் தவிடு பொடியாக்கி அங்கீகரித்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என தெரிவித்துள்ளார்