சர்வதேச முதியோர் தினத்தை முதியோர்களுக்கு பரிசுகள் வழங்கி ஆசி பெற்ற கனிமொழி எம்.பி
சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள லிட்டில் சிஸ்டர் முதியோர் இல்லத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதியோர் தின விழா நடைபெற்றது.
இதில் கழக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள் கலந்துகொண்டு முதியோர்களுக்கு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஆசி பெற்றார்.

இந்நிகழ்ச்சில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான கீதா ஜீவன் எம்எல்ஏ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ, மகளிர் திட்ட இயக்குநர் வீரபத்திரன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்
