தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு கனிமொழி எம்பி உத்தரவு..!
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட, ஸ்டேட் பாங்க் காலனி, VVD சாலை, ஜெயராஜ் சாலை, பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார் கனிமொழி எம்பி .

ஆய்வுக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது :
VVD சாலை, ஜெயராஜ் சாலை, பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டேன் பணிகளின் வேகத்தை அதிகப்படுத்துமாறும் உரிய அதிகாரிகளுக்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


இந்த ஆய்வின் பொது சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான கீதா ஜீவன் எம்எல்ஏ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு.செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
