தமிழ்நாடு

தமிழ்நாடு கேபிள் ஆபரேட்டர்களுக்கு காப்பீட்டு திட்டம் அறிமுகம்..!

தமிழ்நாடு மாநில கேபிள் ஆபரேட்டர்கள் சங்கத்தின் சார்பாக காப்பீட்டு திட்டம் தொடக்க விழா இன்று மயிலாடுதுறை நீடூர் எஸ் ஜெ எஸ் திருமண மகாலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் சந்தானம் ,மாநில பொறுப்பாளர் கடலூர் சிவா , சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கேபிள் டிவி உரிமையாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் தஞ்சை ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார் கூட்டத்தில் காப்பீட்டு திட்டத்தை கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு மாநிலத் தலைவர் சந்தானம் வழங்கினார். கூட்டத்தில் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப கேபிள்டிவி ஆப்பரேட்டர்கள் தொழிலை எப்படி செய்ய வேண்டும் என்பதை விளக்கி கூரினார்கள்.

கூட்டத்திற்கு வருகை தந்த கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு சென்னை சிம்ஸ் மருத்துவமனை சார்பாக இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது இதற்கான ஏற்பாடு செய்து கொடுத்த வேந்தர் டிவி நிர்வாகத்திற்கும் சிம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் விழா கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.