புதுச்சேரியில் அக்டோபர் 21, 25, 28 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் – மாநில தேர்தல் ஆணையர்
புதுச்சேரியில் அக்டோபர் 21, 25, 28 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது :
- புதுச்சேரியில் 5 நகராட்சி சேர்மன், 116 நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட 1,149 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது
- காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்; கடைசி 1 மணி நேரம் கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்கலாம்
- அக்டோபர் 31-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் தெரிவித்துள்ளார்
