தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வீடு திரும்பினார்.
உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக, சென்னை மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.
பின்னர் மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மியாட் மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அனைத்து கதிரியக்க பரிசோதனைகளிலும் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மியாட் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.
