தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் கல்லூரிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் கல்லூரிகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து கல்லூரிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு ஆண்டு மாணவர்களுக்கும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் நேரடியாக நடைபெற வேண்டும்.
- இளங்கலை 2-ம் ஆண்டு, முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் வகுப்பு நடைபெற வேண்டும்.
- இளங்கலை இறுதியாண்டு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் வகுப்பு நடைபெறும்.
- பொறியியல் படிப்புகளுக்கும், ஒவ்வொருஆண்டு மாணவர்களுக்கும் ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகள் நடத்தப்படும்.
- முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
- உயர்கல்வி நிலையங்களில் உள்ள விடுதிகளை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விடுதிகள் செயல்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
