கே.சி.பி. நிறுவனத்தில் 2-வது நாளாக சோதனை…
அரசு டெண்டர் முறைகேடு புகாரில் கோவை, கேசிபி என்ஜினியர்ஸ் நிறுவனத்தில் 2-வது நாளாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ப்பு புகாரில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கோவையில் மட்டும் 42 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். எஸ்.பி.வேலுமணி வீடு, அவரது சகோதரர்கள், நெருக்கமானவர்கள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் கேசிபி அலுவலகத்தில் இன்று இரண்டாவது நாளாக லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
பீளமேடுவில் உள்ள கேசிபி நிறுவனம் அமைந்துள்ள கட்டிடத்தில் 3 தளங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில் இரண்டு தளங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், 3-வதாக உள்ள தளத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை நடத்தப்படும் தளத்தில் 30-க்கும் மேற்பட்ட கணினிகள் இருபப்தாகவும் அவைகள் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே 2 தளங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கம்ப்யூட்டர் ஹார்டிஸ்க்-ல் இருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் பெறப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இன்று சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
