ஆண் போல் மாறிய பெண்… கணவன் – மனைவி என கூறி வாழ்க்கை…. ஓரினச்சேர்க்கையால் நடந்த விபரீதம்…
சேலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆண் போல் வேஷமிட்டு, தனது தோழியுடன் கணவன் – மனைவி போல் வாழ்ந்து வந்த அவர்களை போலீசார் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சேலம் மாவட்டம், தலைவாசலில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்ற இரண்டு பெண்கள், காணாமல் போனதாக அவர்களது பெற்றோர்கள், தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோர்களின் புகாரை அடுத்து, மாயமான அந்த பெண்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், அந்த பெண்கள் சென்னையில் மீட்கப்பட்டு அவரவர் பெற்றோர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். நெருங்கிய தோழிகளான இவர்கள் அதையும் தாண்டி ஓரின சேர்க்கையாளராக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. உனக்கு நான், எனக்கு நீ என்ற அளவில் அவர்களது நட்பு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், அதில் ஒரு பெண்ணுக்கு அண்மையில் திருமணமாகியுள்ளது. ஆனால், தோழியின் மீதான ஈர்ப்பில் இருந்து வெளிவராத அவர், கணவனுடன் சேர்ந்து வாழாமல் விரக்தியில் இருந்து வந்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் நெருங்கிய தோழியை சந்தித்த மற்றொரு தோழியிடம் வீட்டைவிட்டு வெளியேறப் போவதாக கூறியிருக்கிறார். பின்னர் இருவரும் வீட்டைவிட்டு கிளம்பிய அவர்கள், சென்னைக்கு வந்துள்ளனர். அந்த இரண்டு பேரில் ஒரு பெண், தனது தோற்றத்தை ஆண் போல் மாற்றிக் கொண்டுள்ளார். ஆண் போன்றே முடி வெட்டிக் கொண்டும், ஜீன்ஸ் பேண்ட், சட்டை போட்டுக் கொண்டு தன்னை ஆண் என்றே அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.
பின்னர் இருவரும் கணவன் – மனைவி என்று சொல்லிக் கொண்டு ஓட்டலில் வேலை பார்த்து வந்துள்ளனர். அருகில் வாடகை வீடு எடுத்து வந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் தலைவாசல் போலீசார் நடத்திய விசாரணையில், காணாமல் போன பெண்கள் சென்னையில் வசித்து வருவதாக வந்த தகவலின் அடிப்படையில், சென்னைக்கு வந்த போலீசார், அந்த பெண்களை மீட்டு தலைவாசலுக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களது பெற்றோரை அழைத்து சமாதானப்படுத்தியதோடு, அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
