அரசியல்

13 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்… அரசு தலைமை கொறடா அறிவிப்பு…

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வருகிற 13 ஆம் தேதி மாலை 5 மணியளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று அரசு தலைமை கொறடா கோ.வி.செழியன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். 13 ஆம் தேதி திமுக அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நிலையில், மாலை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.