இந்தியா

‘அரசியல் சதுரங்கத்தின் ஆலோசகர்’ பிரசாந்த் கிஷோர் எடுத்த திடீர் முடிவு…!

பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங்கிற்கான அரசியல் ஆலோசகர் பதவியில் இருந்து பிரசாந்த் கிஷோர் விலகியுள்ளார். அரசியல் கட்சிகளில் இல்லாவிட்டாலும், நாடு முழுவதும் அரசியல் மாற்றங்களை செய்து வருபவர் பிரசாந்த் கிஷோர்.

பீகாரைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர், தனது தொழில் சார்ந்த சேவைகளை நரேந்திர மோடி, நிதிஷ் கமார், மம்தா பானர்ஜி, அம்ரிந்தர் சிங், ஜெகன்மோகன் ரெட்டி, தமிழ்நாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இதுவரை அளித்துள்ளார். மேற்கண்ட இவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர் பிரசாந்த் கிஷோர்.

தற்போது பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங்கிற்கு, அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்ட அவர், தற்போது அந்த பதவியை துறந்துள்ளார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட்டு, முன்னாள் கிரிக்கெட் வீரரான சித்துவுக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டது. எற்கனவே சித்துவுக்கும், முதலமைச்சர் அமரிந்தர் சிங்கிற்கும் கருத்து மோதல் இருந்து வருகிறது. இந்த நிலையில் பிரசாந்த் கிணோர், அரசியல் ஆலோசகர் பதவியில் இருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக, அப்பதவியில் இருந்து விலகியதாக பிரசாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், பிரசாந்த் கிஷோர் விலகியுள்ளார். பிரசாந்த் கிஷோரின் இந்த முடிவை பஞ்சாப் முதல்வரான அம்ரிந்தர்சிங்எதிர்பார்க்கவில்லை.

2024 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தல் இருக்கும்போது மாநில தேர்தல்களில் ஈடுபடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதால் பிரசாந்த் கிஷோர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சிலர் கருத்து கூறுகின்றனர்.