தமிழகத்தில் வேலை வாய்ப்பின்மை சதவிகிதம் குறைந்தது… 8.3% லிருந்து 4.8% ஆக குறைவு…
தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பின்மை விகிதம் ஜூலை மாதம் முடிவில் 4.8 சதவிகிதமாக குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பொருளாதாரத்தை ஆய்வு செய்யும் நிறுவனமான சி.எம்.ஐ.இ. இது தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. ஆய்வு முடிவில், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தின்போது, தமிழகத்தில் வேலை வாய்ப்பின்மை விகிதம் 8.3 சதவிகிதமாக இருந்தது என்றும் இந்தாண்டு ஜூலை மாதத்தில் வேலை வாய்ப்பின்மை விகிதம் 4.8 சதவிகிதமாக குறைந்துள்ளதாக ஆய்வில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த மாநிலங்களின் வேலை வாயப்பின்மை விகிதம் 9.17 சதவிகிதத்தில் இருந்து 6.95 சதவிகிதமாக குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா பொதுமுடக்க தளர்வுகளைத் தொடர்ந்து பல்வேறு துறை நிறுவனங்களும் செயல்படத் துவங்கியதே இதற்கு காரணம் என்றும் சி.எம்.ஐ.இ. தெரிவித்துள்ளது.
