8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… மக்களே உஷார்…
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் நீலகிரி, கோவை, சேலம், வேலூர், சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவித்துள்ளது.

இரண்டாம் தேதி, நீலகிரி, கோவை மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் உட்ள மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 3 ஆம் தேதி மற்றும் 4 ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் தென்மேற்கு, தென்கிழக்கு இலங்கை பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால், ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை அந்த பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்
அறிவுறுத்தியுள்ளது.
