INDIA VS SRILANKA : இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றுமா இந்தியா அணி ?
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஒபெனராக இருந்து வரும் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
ஒருநாள் தொடரை இந்தியா அணி வென்ற நிலையில் அதை தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது உள்ளது.
முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா மற்றும் இலங்கை தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால் இந்த தொடர் சமனில் உள்ளது. தற்போது நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும்.
இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இலங்கை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி காலத்தில் பேட் செய்து வருகிறது .
