தமிழ்நாடு

தமிழகத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு… சென்னை வானிலை மையம் தகவல்…

தமிழகத்தில் ஆகஸ்ட் ஒன்றாம் ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் மேற்குதொடரச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, சேலம் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

31 ஆம் தேதி மற்றும் 1 ஆம் தேதி வரை கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று முதல் 1 ஆம் தேதி வரை வடமேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல், தென்மேற்கு வடக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ முட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை அறிவுறுத்தியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.