தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்..!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 25,46,689 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 24,88,775 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 2,583 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 27 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 33,889 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 3,63,90,516 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,41,758 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 3,55,22,588 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,40,897 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 24,025 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 14,87,959 பேர் ஆண்கள் (இன்று-1,026 பேர்), 10,58,692 பேர் பெண்கள் (இன்று-793 பேர்). தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 திருநங்கைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
