Covid19இந்தியா

செப்டம்பரில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி… எய்ம்ஸ் இயக்குநர் தகவல்…

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி குறித்த ஆய்வு முடிவுகள் வரும் செப்டம்பர் மாதம் கிடைக்கும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமடைந்த நிலையில், கொரோனா வைரஸ் தடுக்கும் நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரசுக்கு தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ள நிலையில், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது கர்ப்பிணி தாய்மார்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

கொரோனா இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்த நிலையில் கொரோன மூன்றாவது அலை பரவக் கூடும் என்று மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மூன்றாவது அலையில், குழந்தைகளைத் தாக்கும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்த

நிலையில், குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில், குழந்தைகளுக்கான தடுப்பூசி போடுவதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாரத் பயோடெக் நிறுவனம், குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி குறித்த ஆய்வு முடிவுகள் செப்டம்பர் மாதத்திற்குள் கிடைக்கும் என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி மட்டுமல்லாது, இந்திய மருந்து நிறுவனமான ஜைடஸ் காடிலா-வின் குழந்தைகளுக்கான தடுப்புசி சோதனைகளும் தற்போது நடைபெற்று வருகிறது.