சிவசங்கர் பாபாவுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு…
சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பள்ளியின் முன்னாள் மாணவிகள் அளித்த பாலியல் புகாரில், சிவசங்கர் பாபா மீது மூன்று வழக்குகள் பதியப்பட்டு கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சிவசங்கர் பாபா புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிவசங்கர் பாபாவுக்கு ஆதரவாக செயல்பட்ட பள்ளி ஆசிரியர்களை விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டதை அடுத்து, 5 ஆசிரியைகளுக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி முடிவு செய்தது. இதையறிந்த 5 ஆசிரியைகள் தலைமறைவாகினர். தப்பியோடிய அவர்கள் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியான நிலையில் 3 ஆசிரியைகள் மட்டும் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி, விளக்கமளித்தனர். அவர்களது வாக்குமூலத்தை சிபிசிஐடி போலீசார் பதிவு செய்து கொண்டனர்.
சிவசங்க பாபாவின் நீதிமன்ற காவல் இன்றோடு முடிவடையும் நிலையில், அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
