இந்தியா

ஸ்பைவேர் விவகாரம்: எதிகட்சியினர் அமளி… ஒரே நாளில் இரு முறை ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம்…

ஸ்பைவேர் சாப்ட்வேர் விவகாரம் தொடர்பாக, எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டத்தை அடுத்து, நாடாளுமன்றம் இன்று இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது.

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. நிறுவனம் உருவாக்கியுள்ள ஸ்பைவேர் பெகாசஸ் உளவு பார்க்கும் சாப்ட்வேர், ஒருவருக்குத் தெரியாமல், அவரை உளவு பார்க்கக்கூடிதாகும். ஸ்மார்ட்போன்கள், கணினிக்குள் ஊடுருவி தகவல்கள் திருடக்கூடிய திறன் கொண்டது ஸ்பைவேர் சாப்ட்வேர். மேலும் செல்போனில் உள்ள மைக்ரோபோனை ஆக்டிவேட் செய்து, அவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்கக்கூடிய அளவிற்கு இந்த சாப்ட்வேர் பயன்படுத்தப்படுகிறது.

அரசு மீது அதிருப்தியில் இருப்பவர்கள், உரிமைப் போராளிகள், எதிர்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் போன்கால்களை ஒட்டுக்கேட்கவும், தகவல்களைத் கைப்பற்றவும் பயன்படுத்தப்படுகிறது. என்.எஸ்.ஓ. நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் என்பது பல்வேறு நாட்டு அரசுகள்தான். எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர், பத்திரிகையாளர் உள்ளிட்டோரின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு போன் கால்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்தியாவில் 40 பேரின் செல்போனில் உளவு பார்த்ததாக கூறப்படுகிறது. மத்திய அரசின் தலையீடு நிச்சயமாக

இருக்கும் என்று எதிர்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளிக்க வேண்டும் என்று சுப்பிரமணி சுவாமி உள்பட பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றம், எதிர்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கிய நிலையில், எம்.பி.க்கள் கடும் அமலியில் ஈடுபட்டனர். இதையடுத்து கூட்டத்தை 12 மணி வரை அவைத் தலைவர் ஒத்தி வைத்தார். பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் அவை கூடிய நிலையில், அப்போதும் எதிர்கட்சிகள் விடாமல் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து 1 மணி வரை மீண்டும ஒத்தி வைக்கப்பட்டது. ஒரே நாளில் இரண்டு முறை நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.