அரசியல்தமிழ்நாடு

தொழில்களுக்கு முகவரியாக தமிழ்நாடு மாற வேண்டும்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு…

தெற்கு ஆசியாவில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே தமிழக அரசின் இலக்கு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தொழில் முதலீட்டாளர்களின் முகவரியாக தமிழ்நாடு விரைவில் மாறும் என்றும், கொரோனா காலத்தை கொரோனாவை வென்ற காலமாக மாற்றியுள்ளோம் முதலமைச்சர் தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராணட் சோழா ஓட்டலில், முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் 28,508 கோடி ரூபாய் மதிப்பிலான 49 புதிய திட்டங்களை துவக்கி வைத்தார். 17,141 கோடி ரூபாயில் 35 தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. JSW, ZF Wabco, Srivaru Motors உள்ளிட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெபத்தானது. தொடர்ந்து 4,250 கோடி ரூபாய் முதலீட்டில் 9 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். 7,117 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர், தமிழ்நாடு பண்பாட்டின் அடையாளமாக, தொழில்களுக்கான முகவரியாக மாற வேண்டும் என்றார். தெற்கு ஆசியாவிலேயே தொழில் துவங்க உகந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே இலக்கு என்றும், தொழில்துறையினர் தட்டாமலேயே தமிழக அரசின் கதவுகள் திறக்கும் என்றார்.

2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை 1 லட்சம் கோடி ரூபாய் அமெரிக்க டாலர் ஜிடிபி கொண்ட பொருளாதாரமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார். ஓசூரில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களுக்கு தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும், தமிழகத்தில் மின் சக்தி மூலம் இயங்கம் வாகன உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவத்தார். வெளிநாடுகளில் வசித்து வரும் தமிழர்களோடு தொழில் உறவை உருவாக்க முயற்சி எடுக்கப்படும் என்றும், தமிழ்நாட்டின் தொழில் மேம்பாட்டுக்காக 500 கோடி ரூபாய் நிதிய உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.