அரசியல்தமிழ்நாடு

“மதுசூதனன் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்”: அதிமுக தலைமை அறிவிப்பு…

அதிமுக அவைத்தலைவர் மதசூதனன் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அப்பலோ மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், மதுசூதனனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கடந்தசில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த முதுசூதனனுக்கு கடந்த 18 ஆம் தேதி திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அப்பல்லோ க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் மதுசூதனன் இருந்து வருகிறார்.

மதுசூதனின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாந நிலையில், மதுசூதனன் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அதிமுக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. “கழக தலைவர் மதுசூதனன் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம். தீவிர சிகிச்சை தொடர்வதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது என்றும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் அவரது உடல்நிலை கவலைக்கிடம் என்பதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அதிமுக தலைமை கழகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

இதனிடையே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அப்பல்லோ மருத்துவமனை சென்று மதுசூதனின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.