கொங்கு மக்களின் தேவைகளை மாநில அரசு நிறைவேறுவதைப் பொறுத்தே ‘கொங்குநாடு’ விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை: வானதி சீனிவாசன்
கொங்கு பகுதி மக்களின் தேவைகளை மாநில அரசு நிறைவேற்றுவதை பொறுத்தே கொங்கு நாடு விவகாரத்தில் அடுத்தகட்ட பரிசீலனை வரலாம் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறினார்.
கோவை, சித்தாபுதூர், வி.கே.கே. மேனன் சாலையில் உள் பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தல், அக்கட்சியின் சார்பில் ஆடிட்டர் ரமேஷின் 8 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது ஆடிட்டர் ரமேஷின் உருவப்படத்துக்கு அவர்லர் தூவி மரியாதை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், ஆடிட்டர் ரமேஷ் மரணத்துக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றார். தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அதற்கான ஆதாரங்களை பாஜகவினர் திரட்டி வருவதாகவும் தெரிவித்தார்.
கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கட்டுமானப்பணிகளுக்காக கோயில்கள் இடிக்கப்படுத்துவதற்கு பதிலாக, கோயில்களை அழகுபடுத்தும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். பத்திரிகையாளர்கள், முக்கிய பிரமுகர்களின் செல்போன் தரவுகள் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை குறித்து மத்திய அரசு உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை வெளியிடும் என தெரிவித்தார்.
கொங்குநாடு விவகாரத்தில் தனக்கு தனிப்பட்ட கருத்து எதுவும் இருக்க முடியாது என்றம், கட்சியின் பொறுப்பாளராகத்தான் கருத்தை தெரிவிக்க முடியும் என்றார். தமிழ்நாட்டை தனியாக பிரிக்க வேண்டும் என்று பாஜக நினைக்கவில்லை என்றும் அவர் கூறினார். ஆனால் கொங்கு பகுதி மக்களின் வளர்ச்சி, தேவைகள், அபிலாஷைகள் என பல்வேறு பிரச்சனைகள் பல ஆண்டு ஏக்கமாக உள்ள நிலையில், வருங்காலத்தில் மாநில அரசு அவற்றை எவ்வாறு நிறைவேற்றப்போகிறது என்பதைப் பொறுத்தே கொங்குநாடு குறித்த அடுத்த கட்ட பரிசீலனை வரலாம் எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
