அரசுப்பள்ளி மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலமாகவே நீட் தேர்வுக்கு விண்ணபிக்கலாம் – பள்ளிக்கல்வித்துறை
நீட் தேர்வு எழுத விரும்பும் இருக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள், தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலமாகவே தேர்வுக்கு விண்ணபிக்கலாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்தியா, முழுவதும் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி, நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்வது, ஜூலை 13 ஆம் தேதி துவங்கியது. விண்ணப்பிக்க கடைசி நாள், ஆகஸ்ட் 6 ஆம் தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ntaneet.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நீட் தேர்வு எழுத விரும்பும், தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள், தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலமாகவே விண்ணப்பிக்கலாம் எனவும், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் ஒருங்கிணைந்து, இதற்கான உரிய நடைமுறைகளை பின்பற்றி ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது..
