100 வயதில் 200 கிலோ வண்டி இழுக்கும் முதியவர்… பேரப்பிள்ளைகளின் கல்விக்காக உழைக்கும் “உயர்ந்த மனிதர்”…
பஞ்சாப் மாநிலம் பதிண்டா பகுதியைச் சேர்ந்தவர் ஹர்பன் சிங். இவருக்கு 100 வயதாகிறது. இந்த வயதிலும் மூன்று சக்கர வண்டியில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழகை விற்று வருகிறார். கடந்த பல ஆண்டுகளாகவே மொகா நகரத்தில் காய்கறிகள் விற்பனை செய்து வருகிறார் ஹர்பன்ஸ் சிங்.
அவரது மகன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், மருமகளும் தனது குழந்தைகளை விட்டு வெளியேறியுள்ளார். இத்தகைய சூழ்நிலையில், ஹர்பன்ஸ் சிங், பேரக் குழந்தைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். ஹர்பன்ஸ் சிங்கிற்கு இன்னொரு மகன் இருந்தாலும், அவருடன் இருக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், பஞ்சாப் முதலமைச்சர், ஹர்பன் சிங்கிற்கும் அவரது பேரக் குழந்தைகளின் கல்விக்கும் ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். இது குறித்து ஹர்பன்ஸ் சிங் பேசும்போது, நிதியுதவி மூலம் எனது பேரக்குழந்கைள் சிறந்த வாழ்க்கையையும் கல்வியையும் பெற முடியும் என்றார். வயது 100 என்றாலும் 200 கிலோ எடைகொய்ட காய்கறிகளுடன், பேரப்பிள்ளைகளுக்காக ஹர்பன்ஸ் சிங் உழைத்து வருகிறார்.
