இந்தியா

மேகதாது அணை விவகாரம்: கர்நாடக அரசுக்கு புதுச்சேரி அரசும் எதிர்ப்பு…

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தற்போது புதுச்சேரி அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு விரைவில் கடிதம் எழுத உள்ளதாக புதுவை முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி அரசம் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலவலகர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனையின்போது, மேகதாதுவில் அணை கட்டுவதால், காரைக்கால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. எனவே அணை கட்டுவதை தடுக்கக்கோரி பிரதமருக்கு கடிதம் எழுத ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுத புதுவை முதலமைச்சர் ரங்கசாமி முடிவு செய்துள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முடிவுக்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது புதுச்சேரி அரசும் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.