தமிழ்நாடு

அங்கன்வாடி குழந்தைகளுக்கு தந்த முட்டையில் கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி…

அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டையில் கோழிக்குஞ்சு இருந்தது கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் கடலாடியில் நடைந்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 6 மாதங்களான அங்கன்வாடி மையங்களில் மூடப்பட்டிருந்தன. குழந்தைகளுக்குத் தேவையான அரிசு, பருப்பு, முட்டை உள்ளிட்டவைகளை குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று வழங்கும்படி அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம், கடலாடி, சிறைக்குளம் அருகே ஆய்க்குடி அங்கன்வாடியில் அரிசி, பருப்பு மற்றும் முட்டை விநியோகம் செய்யப்பட்டது.

அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகள் பயிலும் நிலையில், ஊழியர்கள் குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று அவற்றை வழங்கினர். 20 குழந்தைகளுக்கு தலா 10 முட்டை வீதம் 200 முட்டைகள் வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு முட்டை பொறித்து கொடுக்க பெற்றோர் முயன்றபோது, முட்டைகள் அழுகியும், கோழிக்குஞ்சுகள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 200 முட்டைகள் தந்ததில் 120 முட்டைகள் கெட்டுப்போயுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்தபோது, இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.