Covid19இந்தியா

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை! அக்டோபா் – நவம்பர் மாதத்தில் உச்சத்தை தொடும்..! ஆய்வாளர்கள் குழு அதிர்ச்சி தகவல்..

இந்தியாவில் கடந்த ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா என்னும் கொடிய வைரஸ் இன்று வரை ஓய்ந்தபாடில்லை . மத்திய அரசும் மாநில அரசுகளும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் கடைசியில் தோல்வியில் தான் முடிகிறது.

இந்நிலையில் தடுப்பூசி ஒன்று மட்டுமே மத்திய அரசின் முழு நம்பிக்கையாக இருந்து வருகின்றது. கடந்த மூன்று மாதங்களாக மக்களை வேட்டையாடி வந்த கொரோனா இரண்டாவது அலை படி படியாக குறைந்து வருகின்றது.

இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலைக்கு டெல்டா பிளஸ் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் கூறியதாவது:

தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரப்படுத்தும்போது கொரோனாவின் மூன்றாம் அல்லது நான்காம் அலையால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. 3வது அலை பாதிப்பின்போது பெரும்பாலும் தினசரி பாதிப்பு அளவு 50,000 முதல் 1 லட்சம் என்ற அளவிலேயே இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

3வது அலை பாதிப்பு அக்டோபா் அல்லது நவம்பா் மாதங்களில் உச்சம் அடைய வாய்ப்புள்ளது. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்றால் மூன்றாம் அலையின்போது தினசரி பாதிப்பு 1.5 லட்சம் முதல் 2 லட்சம் அளவுக்கு உயர வாய்ப்புள்ளது என்று ஆய்வக குழு எச்சரித்துள்ளது .