100% கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் மாவட்டம்… நீலகிரி ஆட்சியருக்கு முதலமைச்சர் பாராட்டு…
தமிழ்நாட்டில் 100 சதவிகிதம் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதல் மாவட்டமாக நீலகிரி திகழும் நிலையில், அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டி விருது வழங்கினார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே தீர்வாக உள்ள நிலையில், மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தடுப்பூசி குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை மத்திய – மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதில் வெற்றியும் கண்டு வருகிறது.

இந்த நிலையில், படித்தவர்களே தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு தயங்கம் நிலையில், பழங்குடிகள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தி 100-க்கு100 தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாவட்டம் என்ற பெருமையை நீலகிரி மாவட்டம் பெற்றுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 21,800 பழங்குடிகள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், களப்பணியாளர்கள், அரசு சாரா அமைப்புகள், சுகாதார துறை என பலரும் இரவு பகல் பாராமல் உழைத்து அதன் விளைவாகவே நீலகிரியில் அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக மாவட்ட ஆட்சியரான இன்னசென்ட் திவ்யா என்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பழங்குடியினர் தயங்கிய நிலையில், அவர்களிடம் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் இந்த பெரும் முயற்சிக்கு வித்திடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நீலகிரி மாவட்ட மக்கள் 21,800 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதற்கு அம்மாவட்ட ஆட்சியரான இன்னசென்ட் திவ்யாவிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு விருது வழங்கி பாராட்டினார்.
