அரசியல்தமிழ்நாடு

கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்: எடப்பாடி பழனிசாமி

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால், தொழிலாளர்கள் வேலை இழந்து வேதனைக்கு ஆளாகியிருப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம், ஓமலூரில் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துள்ள காரணத்தால், தொழிலாளர்கள் வேலை இழந்து மிகுந்த சோதனைக்கு ஆளாகியிருப்பதாகவும் எனவே கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சிமெண்ட், கம்பி, செங்கல் எம்சாண்ட் உள்ளிட்டவைகளின் விலை ஒட்டுமொத்தமாக உயர்ந்திருப்பதாகவும் இதனால் தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். எனவே கட்டுமானப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின்போது, வீடு கட்டும் ஏழை எளிய மக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக, குறைந்த விலையில் அம்மா சிமெண்ட் வழங்கப்பட்டு வருகிறது. இதை அதிகளவில் வழங்கப்பட வேண்டும் என்றும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் ஏழை எளிய மக்கள் பாதிப்புக்கு ஆளாக மாட்டார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.