பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி! அவசரமாக மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை!
தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பயணத்தைத் தொடங்கி பின்னர் நடிகையாக பல திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் பாத்திமா பாபு. இவர் தனியார் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

இந்நிலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் பாத்திமா பாபு அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. இதைப்பற்றி விளக்கிய பாத்திமா பாபு , சிறுநீரகத்தில் 7.8 மில்லி மீட்டர் அளவில் கல் இருந்ததாகவும், அது சிறுநீர் குழாய்க்கு சென்றதால் தாங்க முடியாத வலி ஏற்படவே பாத்திமா பாபு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை செய்து முடிக்கப்பட்டு, தற்போது நலமுடன் இருப்பதாகவும் தனது யூ-ட்யூப் சேனலில் குறிப்பிட்டுள்ளார்.
