Uncategorized

கரூர் மாவட்ட மாற்றுதிறனாளிகளுக்கு பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன !

தமிழகத்தில் கொரோனா என்னும் கொடிய தொற்றின் முதல் அலை மற்றும் இரண்டாம் அலையின் தாக்கத்தால் சிக்கி பலர் வேளைக்கு செல்லமுடியாமல் அன்றாட சர்சை வாழ்வுக்கே கஷ்டப்பட்டு வறுமையின் பிடியில் சிக்கி உள்ளனர் .

இந்நிலையில் தமிழக அரசும் பல அரசியல் கட்சி தலைவர்களும் திரை பிரபலங்களும் அவர்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள் .

அந்தவகையில் நேற்று கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மாற்றுதிறனாளிகளுக்கு முதல்கட்டமாக ,கரூர் தொகுதி வெங்கமேடு பகுதியில் V.V.செந்தில்நாதன் அவர்கள், தலைமையில்,மாவட்ட தலைவர் K.சிவசாமி அவர்கள் முன்னிலையில் முன்னாள் IPS அதிகாரி,மாநில துணைதலைவர் அண்ணாமலை குப்புசாமி அவர்கள் சிறப்புரையுடன் வீடு வீடாக சென்று அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கினர்.