பேரணியில் அதிபர் பைடனை கடுமையாக விமர்சித்த முன்னாள் அதிபர்
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல் ஆரம்பித்தில் முதலே பைடனுக்கும் ,டிரம்ப்புக்கும் இடையான வாய் போர் அதிகரித்தது .இதற்கிடையில் டிரம்ப் இன் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர் .
பல போராட்டங்களுக்கு பிறகு ஜோ பைடன் அமெரிக்கா நாட்டின் அதிபராக பொறுப்பேற்றார் அப்போதும் நாற்காலி மேல் இருந்த பாசத்தால் டிரம்ப் வெளிவர மறுத்து வந்தார் .
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய பின்பு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதன்முறையாக பேரணியில் கலந்து கொண்டார். ஒஹிகோவில் நடைபெற்ற இந்த பேரணியில் பேசிய டொனல்ட் ட்ரம்ப், 2020 தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக கூறினார்.
குடிபெயர்பவர்களின் எண்ணிக்கை அதகரித்து வருவதாக கூறிய ட்ரம்ப், இந்த விவகாரம் தொடர்பாக ஜோ பைடன் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று குற்றம் சாட்டினார்.
