தமிழ்நாடு

“8 வழிச்சாலை எதிரான போராட்ட வழக்குகள் ரத்து அறிவிப்பு”… விவசாயிகள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி…

8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். விவசாயிகள் மீதான வழக்கு தள்ளுபடி செய்ததற்கு, சேலம் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களை அழித்து, பல லட்சக்கணக்கான மரங்களை அழித்தும், கொண்டு வருவதாக இருந்த சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள், 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து அறவழியில் போராடி வருகின்றனர்.
தொடர்ந்து 8 வழிச்சாலைக்காக விவசாய நிலங்கள் கைப்பற்றும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 8 வழிச்சாலைக்கு எதிரான போராட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறுவதாக சட்டப்பேரவையில் அறிவித்தார். அவரது இந்த அறிவிப்புக்கு விவசாயிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு எங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். விரைவில் 8 வழிச்சாலை திட்டம் ரத்து என்பதையும் முதலமைச்சர் அறிவிப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.