இந்தியா

“கான்பூர் கோல்டன் பாபா”… ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்க மாஸ்க் அணிந்து வலம் வரும் மனிதர்…

கொரோனா வைரசின் தாக்கம் உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை, மூன்றாம் அலையில் ஏராளமானோர் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு ஒரே தீர்வாக தடுப்பூசி மட்டுமே உள்ள நிலையில், பொதுமக்கள் வெளியே செல்லும்போது, முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி வருகிறது.

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய – மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டும், முகக்கவசம் பற்றிய அவசியம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கைகளை அடிக்கடி கழுவுவது, சமூக இடைவெளி குறித்தும் அறிவுறுத்தி வருகிறது.

தங்கள் வசதிக்கேற்ப முகக்கவசங்கள் அணிந்து வருகின்றன. இந்த நிலையில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மனோஜ் ஆனந்த் என்பவர், தங்கத்தால் ஆன முகக்கவசம் அணிந்து வெளியில் செல்கிறார். இந்த மாஸ்க்கிற்கு சிவ் ஷரன் மாஸ்க் என்று பெயரிட்டுள்ளார். கான்பூர் நகரைச் சேர்ந்த மனோஜ் ஆனந்த், தங்கத்தின் மீது அதிக விருப்பம் கொண்டவராக இருந்து வருகிறார். இந்த நிலையில், 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க முகக்கவசம் அணிந்து நகரில் வலம் வருகிறார். கான்பூர் நகரைச் சேர்ந்தவர்கள், கோல்டன் பாபா என்றே அழைத்து வருகின்றனர்.

இது மட்டுமல்லாமல் அவரது கழுத்தில் சங்கு ஓடு, மீன், அனுமன் லாக்கெட் ஆகியவை அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டவை, ஒட்டுமொத்தமாக மனோஜ் இரண்டு கிலோ எடை கொண்ட தங்க நகைகளை அணிந்துள்ளார்.