பாகிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்பு ! 2 பேர் பலி பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துமனையில் அனுமதி என தகவல்!
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஜோஹார் டவுன் பகுதியில் உள்ள வீட்டின் வெளியே இன்று காலை திடீரென்று பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்தது . இந்த குண்டு வெடிப்பில் சாலையில் சென்று கொண்டிருந்த குழந்தைகள், பெண்கள் உள்பட பலர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குண்டு வெடிப்பில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 16 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் . பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அந்நாட்டு ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
