இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்த இளைஞன்…
இரண்டு பெண்களை ஒருவருக்குத் தெரியாமல் ஏமாற்றி காதலித்து வந்த இளைஞனை, பெற்றோர் சம்மதத்துடன் இரண்டு பெண்களும் திருமணம் செய்துள்ள நிகழ்வு தெலங்கானாவில் நடந்துள்ளது.
தெலங்கானா மாநிலம், ஆதிலாபாத் மாவட்டம், கான்பூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூன். இவர், தனது அத்தை மகள்களை ஒருவருக்கொருவர் தெரியாமல் ஏமாற்றி காதலித்து வந்துள்ளார். ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள அர்ஜுனுக்கு, வீட்டில் திருமணம் செய்வதற்கான பேச்சுகள் எழ ஆரம்பித்தது. இந்த நிலையில், அத்தை மகள்கள் இருவரையும் அர்ஜூன் காதலித்து ஏமாற்றியது தெரியவந்தது.
எங்களை ஏமாற்றினாலும், பரவாயில்லை, அர்ஜூனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று இரண்டு பெண்களும் உறதியாக இருந்தனர். இதையடுத்து, பெற்றோர் சம்மதத்துடன் ஒரே சமயத்தில், அத்தை மகள்களை, அர்ஜூன் திருமணம் செய்து கொண்டார்.
ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை மணப்பதற்கு பழங்குடி இனத்தில் அனுமதி உள்ளதால், அவர்கள் திருமணத்தில் எந்தவித எதிர்ப்புகளும் எழவில்லை. ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ள அர்ஜூனுக்கு, 90s கிட்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளார்.
