ஆடியோவை அடுத்து போஸ்டர் ரெடி! சசிகலாவின் அடுத்த மூவ்…?!
அரசியலில் இருந்து விலகுவதாக கூறிய சசிகலா, அண்மை காலமாக அதிமுக நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசி வருகிறார். இந்த நிலையில், அதிமுகவில் இருந்து 15 பேர் நீக்கப்படுவதாக அதன் தலைமை அதிரடியாக அறிவித்தது. ஆனாலும் தொடர்ந்து சசிகலா, அதிமுகவினருடன் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், நெல்லை மற்றும் பாளை பகுதியில் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ள அந்த போஸ்டர்களில் தாயே வா, தலைமை ஏற்க வா, தள்ளாடும் தமிழகத்தை தலைநிமிர்த்த வா. தொண்டர்களின் துயர் துடைக்க வா என வாசகங்கள் இடம் பெற்றுள்ள போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் வழக்கறிஞர் பிரிவு தலைவர் வெளியிட்டதாக இடம் பெற்றுள்ளது. நெல்லை மற்றும் ஸ்ரீ வைகுண்டம் பகுதியில் சசிகலாவுக்கு ஆதரவாக வெளியிட்ட போஸ்டர்கள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
