ஒரே இரவில் ஸ்டாராக மாறிய ராஜஸ்தான் அணி வீரர்!.. யார்யா நீ ?
டெல்லி அணிக்கு எதிரானப் போட்டியில் ஒரே ஓவரில் 5 சிக்சர் அடித்த ராகுல் டிவாட்டியா குறித்து ரசிகர்கள் கூகுளில் அதிகமாக தேடி வருகின்றனர்.
2020 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்ஸ்மேனான ராகுல் டிவாட்டியோ ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற போட்டியில் 6 பந்துகளில் மொத்த ஆட்டத்தை மாற்றியதை அடுத்து, ஒரே இரவில் இணையத்தில் பிரபலமாகியுள்ளார். மேலும் அவரது பேட்டிங் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. ஷார்ஜா மைதானத்தின் ஸ்கோர்போர்டில், சதமடித்த மாயங்க் அகர்வாலின் 50 பந்துகளில் 106 ரன்களும், கேப்டன் கே.எல்.ராகுலின் 54 பந்துகளில் 69 ரன்கள் அடித்து மொத்தமாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியினர் 223 ரன்களை ராஜஸ்தான் அணிக்கு இலக்காக வைத்தார்கள்.
பின்பு ராஜஸ்தான் அணியின் டிவாட்டியோ ஆரம்பகட்டத்தில் வெறுப்பூட்டும் விதமாக ஆடத் தொடங்கினார். சமூக ஊடகங்களில் ரசிகர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டார். மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கடைசி மூன்று ஓவர்களில் 51 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தோல்வியடைவது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர் ஷெல்டன் கோட்ரெலின் 18வது ஓவரில் டிவாட்டியோ தொடர்ந்து 5 சிக்ஸர்களை விளாசினார். இதனையடுத்து வெற்றி பெற 12 பந்துகளுக்கு 21 ரன்கள் மட்டுமே வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
அதன் பின்பு, 19வது ஓவரில் டிவாட்டியோ ஆட்டமிழந்தவுடன், ஜோஃப்ரா ஆர்ச்சர் 13 ரன்கள் மற்றும் டாம் குர்ரான் 4 ரன்கள் எடுத்து நாட் அவுட் என்ற நிலையில் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் அணியை வெற்றி பெற வைத்தார்கள். ஐ.பி.எல் வரலாற்றில் இது மிக அதிகமான ரன் சேஸ் ஆகும். மேலும் ராஜஸ்தான் அணி வீரர்களான சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 85 ரன்கள் மற்றும் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 27 பந்துகளில் 50 ரன்களை அடித்த போதிலும் ரசிகர்கள் அனைவரது பாராட்டையும் டிவாட்டியோவின் தனது ஐந்து சிக்ஸுர்களால் பெற்றுள்ளார்.
ஆகையால் தற்போது ராகுல் டிவாட்டியோவின் பிரபலமான பெயரை ரசிகர்கள் கூகுள் செய்ய தொடங்கியுள்ளனர். இப்படி ஒரு சிறந்த ஆட்டத்தை கண்ட ரசிகர்கள், அவரை பற்றி மேலும் தகவல்களை அறிந்துகொள்ள, சமூக ஊடகங்களில் டிவாட்டியோவின் பெயர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்ஸ்மேன் என்ற தேடல்கள் இணையத்தில் உச்சத்தை தொட்டு வருகிறது.

அதில், ஐ.பி.எல்லில் டிவாட்டியோவின் சம்பளத்திலிருந்து அவரது வயது மற்றும் சொந்த ஊர் வரை, இந்த “புதிய” பேட்ஸ்மேன் பற்றி அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமடைந்துள்ளனர். மேலும் ஒரு சிலர் போட்டியில் டிவாட்டியோ அடித்த ஐந்து சிக்ஸ்சர்கள் குறித்த மீம்ஸ்களை தேடினர். ஹரியானாவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான 27 வயதுடைய ராகுல் டிவாட்டியோ, 2013ம் ஆண்டில் முதல் தர வரிசையாக கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
