1 மாதத்திற்கு மேல் ஆகியும் கரை திரும்பாத மீனவர்கள்…! கண்ணீர்மல்க காத்திருக்கும் மீனவ குடும்பங்கள்!
கடலுக்கு மீன்பிடிக்க சென்று கடும் புயலில் சிக்கி மாயமான கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்கள் நகையை சேர்ந்த 9 பேர் மேற்குவங்கத்தை சேர்ந்த 9 பேர் உள்ளிட்ட 25 மீனவர்கள் 1 மாதத்திற்கு மேல் ஆகியும் இன்று வரை கரை திரும்பாததால் மீனவர்களின் குடும்பங்களும் மீனவ கிராமங்களும் கண்ணீர்மல்க காத்திருக்கின்றன .
இந்நிலையில் காணாமல் போன மீனவர்கள் கடும் புயல் காரணமாக சர்வதேச கடல்பகுதியில் ஆளில்லா தீவுகளிலும் சிக்கிருக்கலாம் என்றும் மத்திய அரசு ஹெலிகாப்டர் மற்றும் கப்பல் படையினர் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட வேண்டும் என்றும் மீனவர்களின் குடும்பத்தினர் அரசுக்கு மனவேதனையுடன் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
