சினிமா

“கடன் செலுத்திய பிறகும் பத்திரத்தை தராத பிரபல தயாரிப்பாளர்”… காவல் துறையில் நடிகர் விஷால் புகார்…

கடனை திருப்பி செலுத்திய பிறகும் உறுதிமொழி பத்திரத்தை திருப்பி தராமல், திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, தி.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் பல்வேறு வெற்றி படங்களை தயாரித்தவர் ஆர்.பி.சௌத்ரி. இந்த நிலையில், அவர் மீது, தி.நகர் காவல் நிலைய துணை ஆணையரிடம் நடிகர் விஷால் புகார் அளித்துள்ளார்.

விஷால் பல்வேறு படங்களை தயாரிக்கும்போது, சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து, ஆர்.பி. சௌத்ரியிடம் இருந்து நிதி பெற்றதாக தெரிகிறது. வாங்கிய கடனை செலுத்திய பிறகும், அதற்காக கொடுக்கப்பட்ட கடன் பத்திரத்தை திருப்பி அளிக்காமல், ஆர்.பி.சௌத்ரி இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், நடிகர் விஷால், ஆர்.பி.சௌத்ரி மீது காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார். புகாரில், கடனை திருப்பி செலுத்திய பிறகும், கடன் பத்திரத்தை திரும்ப தராமல் ஒரு வருடத்திற்குமேல் இழுத்தடிப்பதாகவும், அவதூறாகவும் பேசியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் பத்திரத்தில், தான் கொடுத்த பத்திரத்தை திருப்பி செலுத்தாததுபோன்று மோசடி செய்து, தன்மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் விஷால் புகாரில் கூறியுள்ளார். எனவே தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் விஷால் புகாரில் கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மீது கூறப்பட்ட புகார் உண்மை என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.