அரசியல்தமிழ்நாடு

பரிசோதனை செய்யாமல் கொரோனா குறைந்தது என்றால் எப்படி? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு…

கொரோன குறைந்ததாக சொல்கிறார்கள்; ஆனால் பரிசோதனை செய்தால்தானே கொரோனா இருக்கிறதா? இல்லையா? என்பது தெரிய வரும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார். அவர் அதிமுகவை சேர்ந்தவர் இல்லை. இதை எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார் என்றார்.

அதிமுகவுக்கு பொது செயலாளர் ஜெயலலிதாதான். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருடன் செயல்படுகிறது. இருவரும்தான் கட்சியை வழி நடத்துவர். நாங்கள்தான் அதிமுக என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. இரட்டை இலை எங்களிடம்தான் உள்ளது என்றார். சசிகலா இல்லாமல் அதிமுக சிறப்பாக செயல்படுகிறது. இதே நிலை தொடரும் என்றும் அவர் கூறினார். தமிழகத்திற்கு தடுப்பூசியை அதிகரித்து தர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். எதிர்கட்சி கடமைகளை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செய்து வருகிறார் என புகழாரம் சூட்டினார்.

தமிழகத்தின் பல இடங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் இரண்டு லட்சம் தடுப்பூசி போடுவதாக கூறுகின்றனர். ஆனால் எங்கு போட்டுள்ளனர் என்பது தெரியவில்லை என்றார். திமுகவினர் 39 எம்பிக்களை கையில் எதற்காக வைத்துள்ளனர் என்று கேள்வி எழுப்பிய அவர், மத்திய அரசுக்கு அழுத்தம் தராமல் வெற்று கடிதங்களை எழுதி வருவதாக குற்றம் சாட்டினார். கொரோனா பரவல் குறைந்ததாக சொல்கிறார்கள். ஆனால் பரிசோதனை செய்தால்தானே கொரோனா இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியவரும் என்றும் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.

வரும் 14 ஆம் தேதி சென்னையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் கூட்டம் நடத்த அனுமதி வேண்டி, டிஜிபி அலுவலகத்தல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்தார்.