(07-06-2021), இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று (07-06-2021), பெட்ரோல் லிட்டருக்கு 96.23 ரூபாய், டீசல் லிட்டருக்கு 90.38 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.
சென்னையில் கடந்த ஜூன் 4 முதல் பெட்ரோல், லிட்டர் 96.23 ரூபாய், டீசல் லிட்டர் 90.38 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்றும் பெட்ரோல் விலை மாற்றமின்றி லிட்டர் 96.23 ரூபாய் ஆகவும், டீசல் விலை லிட்டர் 90.38 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
