இந்தியா

விலங்குகளையும் விட்டுவைக்காத கொரோனா…! ஜார்கண்ட் உயிரியல் பூங்காவில் 21 விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை!

ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் உள்ள உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்டு வந்த 10 வயதான புலி ஒன்று கடுமையான காய்ச்சல் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்தது. முன்னதாக அந்த புலிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இல்லை என்பது உறுதியானது.

எனினும் காய்ச்சல் காரணமாக புலி இறந்ததால், பூங்காவில் உள்ள சிங்கம், புலி, சிறுத்தை ஆகிய விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

cheetah lion tiger | Big cat family, Big cats, Family pet

இதன்படி மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் 4 சிங்கங்கள், 9 புலிகள், 8 சிறுத்தைகள் என மொத்தம் 21 விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.